சிவகார்த்திகேயன் மிகப்பெரிய பிரச்சனைக்கு முடிவு!

*சிவகார்த்திகேயன்*

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது சிவகார்த்திகேயன் டான், அயலான், சிங்கப்பாதை மற்றும் பெயரிடப்படாத SK60 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் இவர் இதற்கு முன் கௌதம் கார்த்தி நடித்த ரங்கூன் திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன் மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசனின் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கிய வீடியோவை அனைவரும் பார்த்திருப்பார்கள் இதனால் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை என்று கருதப்பட்டது.

தற்போது இந்த செய்தி வெளியான நிலையில் அந்த சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன். அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ருதிஹாசன் இதை காரணம் காட்டி சிவகார்த்திகேயனுடன் நடிக்க மாட்டேன் இன்று கூறியது குறிப்பிடத்தக்கது. இப்போது கமல்ஹாசன் எடுத்திருக்கும் இந்த முடிவிற்கு ஸ்ருதிஹாசன் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.