வலிமை திரைப்படத்தின் பாடல் வெளியீடு

*வலிமை பாடல்*

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தினை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார், Bayview Project LLP இன் கீழ், Zee Studios உடன் இணைந்து, இணை தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் போனி கபூர் தயாரித்துள்ளார்.

ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி ஜே, சுமித்ரா, ராய் அய்யப்பா, சைத்ரா ரேட்டி, புகழ், யோகி பாபு, துருவன், தினேஷ் பிரபாகர், செல்வா, ஜி.எம் சுந்தர், அச்யுத் குமார், பவீல் நவகீதன், கார்த்தி ராஜா ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தற்போது வலிமை திரைப்படத்தில் இடம் பெற்ற என்ன குறை என்ற பாடல் வீடியோ பாடலாக யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடலை நந்தினி ஸ்ரீகர், பார்த சாரதி பாடி உள்ளனர், தாமரை இப்பாடலை எழுதியுள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.