உலக திருநங்கை அழகிப் பட்டம் வென்ற ஸ்ருதி..?

*அழகிப் பட்டம் வென்ற ஸ்ருதி*

கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ருதி சித்தாரா. இவர் உலக திருநங்கை அழகி பட்டம் வென்றுள்ளார். இவருக்கு கேரள மாநிலம் உயர்கல்வி அமைச்சர் பிந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிஸ் இரான்ஸ் குளோபல் என்னும் பட்டம் பெற்றார். ஸ்ருதி “தனக்காக தன்னைச் சார்ந்துள்ள சமுதாயத்திற்காக தன் நாட்டுக்காக உலக திருநங்கை அமைப்புக்காக ஒதுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட என அனைவருக்குமான விருதாக இதை நான் பார்க்கிறேன்” என்றார்.

மேலும் ஸ்ருதி “மிஸ் இரான்ஸ் குளோபல் பட்டம் பெற காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. நான் மகிழ்ச்சியாக உள்ளேன் இதை நான் எதிர்பார்க்கவில்லை இனி வரும் போட்டிகளுக்கு என்னை நான் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என்றார்.