கொலைகாரனாக மாறிய STR!

*வெந்து தணிந்தது காடு*

சிலம்பரசன் டி.ஆர் “வெந்து தணிந்தது காடு” படபிடிப்பு தொடங்கியதால் கையில் துப்பாக்கி ஏந்தி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

STR சிலம்பரசன் அல்லது சிம்பு தமிழ் நடிகர்களில் மிகவும் பிரபலமானவர். அவர் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்னும் படத்தில் நடித்து வருகிறார். மாநாடு திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற பிறகு தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது அறிவிக்க ஒரு கொலையாளி போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

படத்தின் புதிய ஷெட்யூல் தொடங்கிவிட்டது என்று அறிவிக்க சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் துப்பாக்கியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். செய்தியைப் பகிர்ந்து கொண்டு “படப்பிடிப்பு தொடங்கியது #VTK” என்று குறிப்பிட்டார்.

இப்படத்தின் மூன்றாவது ஷெட்யூல் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிவரும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கிராமத்தின் பின்னணியில் உருவாகும் ஒரு சமூக நாடகம். ஆஸ்கர் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தை வேல்ஸ் பில்ம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.