திடிரென நைட் எனக்கு தனுஷ் ஃபோன் பண்ணாரு DD

*DD*

நடிகர் தனுஷ் முதல் முதலாக இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பவர் பாண்டி. இதில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, டிடி போன்ற நடிகர்கள் நடித்து இருப்பார்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சியின் முக்கியமான தொகுப்பாளர் தான் டிடி (திவ்யதர்ஷினி), காஃபி வித் டிடி, அன்புடன் டிடி, ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர்.

அதுமட்டுமில்லாமல் விருது விழாக்கள், பிரஸ்மீட், இசை வெளியீட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். தொலைக்காட்சியை தாண்டியும் சினிமா பிரபலங்களுடன் நல்ல நட்பை பாராட்டி வருகிறார் டிடி. இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்கி வெளியான பவர் பாண்டி திரைப்படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது பற்றிக் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தில் ரேவதிக்கு மகளாக நடித்திருப்பார் டிடி. இந்நிலையில் அந்த திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசிய டிடி, “திடீரென தனுஷ் தனக்கு போன் செய்து தான் இயக்கும் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறினார். தனுஷ் சார் போன்ற ஒரு நடிகர் கேட்டால் எப்படி மறுக்க முடியும்? சரி என்று ஒப்புக் கொண்டேன். லேடிஸூக்கு மெஸேஜ் சொல்லும் ஒரு கேரக்டர், மக்களுக்கு தெரிந்த முகமாக இருந்தால் நல்லா இருக்கும் என்பதால் அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறிய வார்த்தைக்காக மட்டுமே நடிக்கலாம் என்று நினைத்தேன்“.

பிறகு தனுஷ் சார் பேசியதை மறந்து விட்டேன். மீண்டும் ஒரு நான் போன் பண்ணி அடுத்த வாரம் ஷூட்டிங் என்றார். அப்போதுதான் அவர் பேசியது எனக்கு ஞாபகம் வந்தது, இரவு ஷூட்டிங் இருந்தது ஆனால் காலையிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று மற்றவர்கள் நடிப்பதை பார்த்து நடிக்க கற்றுக் கொண்டு நடித்தேன்” என்று டிடி தனது பேட்டியில் கூறினார்.