சுதா கொங்கராவே பாத்து மிரண்டு போன அஜித் படம்

*சுதா கொங்கரா*

துரோகி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பெண் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இதற்குப் பிறகு இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.

தற்போது சுதா கொங்கரா மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் Film Companion South என்ற யூடியூப் சேனலில் Directors Roundtable என்ற நிகழ்ச்சி நடத்தியுள்ளனர் இதில் இயக்குனர்கள் சுதா கொங்கரா, விஜய், வெங்கட் பிரபு, நெல்சன் திலீப்குமார், விக்னேஷ் சிவன் மற்றும் அருண் மாதேஸ்வரன் கலந்து கொண்டனர்.

இதில் சுதா கொங்கரா அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை பாராட்டிப் பேசியுள்ளார். மங்காத்தா திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சுதா கொங்கரா மங்காத்தா திரைப்படத்தைப் பார்த்து நான் அசந்துவிட்டேன் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் படத்தை பார்த்த பிறகு வெங்கட் பிரபுவிற்கு இரண்டு பக்கம் மேசேஜ் அனுப்பினேன் என்றும் குறிப்பிட்டார்.