அன்புமணிக்கு | பதிலடி கொடுத்த சூர்யா..?

*சூர்யா பதிலடி*

உலகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி வெளியான ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு தரப்பால் கொண்டாடப்பட்டு வருகிறது அனைவரும் இந்த படத்தை பாராட்டி கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பல ஐபிஎஸ் ஐஏஎஸ் சமூக ஆர்வலர்களும் இப்படத்தை கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

ஜெய் பீம் திரைப்படம் மிக முக்கியமான அரசியல் திரைப்படமாகவும் இப்படம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட இப்படம் மனித உரிமை அடிப்படையில் இப்படம் ஒரு முக்கியமான படம் எனப் பல தரப்பினர் கூறிவருகின்றனர்.

அதே சமயத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் சிலர் இப்படத்தை எதிர்க்கிறார்கள். அது என்னவென்றால் இப்படத்தில் உள்ள சில குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச்சேர்ந்து இருப்பதாகச் சொல்லி சில எதிர்ப்புகளும் இப்படத்துக்கு வருகின்றது.

பாமகவின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இந்த விஷயத்தைக் குறித்து நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் சில கேள்விகளும் சூர்யாவை நோக்கி எழுப்பியிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ் கூறுவது” ஏன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்திய மாதிரி குறியீடுகள் வச்சிருக்கீங்க? அதேபோல் சில நெகட்டிவ் கேரக்டர்களுக்கு பெயர்கள் மாத்தி வைத்தது ஏன்? அதில் இருக்கக்கூடிய அரசியல் என்ன?” இப்படி பல கேள்விகளை முன்வைத்தார். இதைப் பற்றி பல ஊடகங்களில் விவாதம் கிளம்பி இருந்தது.

தற்போது அதற்கு பதிலாக நடிகர் சூர்யா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நடிகர் சூர்யா கூறுவது” மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு வணக்கம். நீதி நாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டத்தின் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பதே ஜெய்பீம் இன் மையக்கரு. பழங்குடி மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டதைப் போல எந்த ஒரு தனி நபரையோ ஒரு சமூகத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒரு போதும் எனக்கோ படக்குழுவினர்களுக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய விஷயத்தை இப்படியாக சரி செய்தது தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். படைப்புச் சுதந்திரம் என்னும் பெயரில் எந்த ஒரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் இல்லை என்னும் உங்கள் கருத்தை நான் முழுவதுமாக ஏற்கிறேன். ஆனால் அதே போல் படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்ப்பிற்கள் என்று நான் நம்புகிறேன். எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள் அதில் சாதி மத மொழி இன பேதம் இல்லை உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை குறிப்பிட்ட அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்ட குரல் பெயர் அரசியலால் மடை மாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது. சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பன்பளிப்பை தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதும் எல்லா மக்களின் பேரன்பும் பேராதரவும் எனக்கு இருக்கிறது விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்கும் என்னமோ தேவையோ எனக்கு இல்லை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். சமத்துவமும் சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம் தங்கள் புரிதலுக்கு நன்றி”.

இந்தக் கடிதத்தின் மூலம் ஜெய்பீம் திரைப்படத்தின் பிரச்சனை முடிவுக்கு வருமா என்பதும் அல்லது அதற்கு எதிர் தரப்பில் இருப்போர் இதற்கு என்ன பதில் தரப்போகிறார் என்பது இனிவரும் காலங்களில் தெரியும்.