அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்து நடிகரான தமிழ் நடிகர்கள்..?

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான பலர் தனது ஆரம்ப காலத்தில் ஒரு டைரக்டராக ஆக வேண்டுமென்று அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்து காலப்போக்கில் நடிகர்களாக மாறி விட்டனர். அவர்கள் யார் யார் என்று இதில் பார்ப்போம்:

*நடிகர் விஷால்*

செல்லமே படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகராக அறிமுகமானவர். அதற்கு முன்னாடி ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கிய வேதம் என்னும் திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் விற்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.

*நடிகர் கார்த்தி*

பருத்திவீரன் திரைப்படத்தில் அறிமுகமானவர் இவர் ஆனால் அதற்கு முன்னாடி மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து என்னும் திரைப்படத்தில் மணிரத்தினத்திற்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.

*நடிகர் சித்தார்த்*

பாய்ஸ் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இவர். மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் என்னும் திரைப்படத்தில் மணிரத்னத்திற்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். இதில் குறிப்பிடக்கூடிய விஷயம் சித்தார்த் மணிரத்தினத்தின் மனைவியான சுஹாசினியின் சொந்தக்காரர் ஆவார்.

*நடிகர் சசிகுமார்*

சசிகுமார் அவர்கள் இயக்கி நடித்த முதல் படம் தான் சுப்பிரமணியபுரம் திரைப்படம். அதற்கு முன்னாடி இயக்குநர் அமீருடன் மௌனம் பேசியதே, ராம் என்னும் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.

*நடிகர் வீரா*

நடுநிசி நாய்கள் என்னும் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.

*நடிகர் ஜெயம் ரவி*

ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்னாடி இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா அவர் இயக்கிய ஆளவந்தான் என்னும் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

*நடிகர் பாக்கியராஜ்*

இவர் இயக்குனர் பாரதிராஜாவின் பல திரைப் படத்திற்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

*நடிகர் சிவகார்த்திகேயன்*

சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய வேட்டை மன்னன் என்னும் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். துரதிஸ்டவசமாக வேட்டை மன்னன் திரைப்படம் வெளியாகவில்லை. ஆனால் நிறைய நபர்கள் தற்போது விஜய் நடித்து கொண்டிருக்கும் பீஸ்ட் என்னும் திரைப்படம் தான் வேட்டி மன்னனின் கதை என்று கூறிவருகின்றனர்