அரசுப் பணிகளுக்குத் தமிழ்த் தேர்வை தமிழ்நாடு கட்டாயமாக்கியது

*அரசுப் பணிகளுக்குத் தமிழ்த் தேர்வு*

தகுதியான தமிழ்மொழித் தாளில் தேர்ச்சி பெறாவிட்டால் ஒட்டுமொத்த தேர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பிற பாடத்தாள்கள் மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்று உத்தரவின்படி கூறப்பட்டுள்ளது.

மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழக அரசு பணிகளும், அரசு பொதுத்துறை நிறுவனங்களிலும் சேர தமிழ் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கான உத்தரவை மாநில அரசு வெள்ளிக்கிழமை பிறப்பித்த தாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.