பிறந்தநாளன்று இளம்பெண் தற்கொலை..?

*காதலனுடன் பேசமுடியாத விரக்தியில் தற்கொலை*

தன் காதலனுடன் பேச முடியாததால் பிறந்தநாளன்று இளம்பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் அருகே இருகுரு ராம் நகர் ஐந்தாவது வீதியைச் சேர்ந்த சோமு ராஜ் என்பவரின் மகள் சுவாதி.

ஸ்வாதி சேலம் மாவட்டம் நாயக்கர் பட்டியில் பாட்டி வீட்டில் இருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு பின்பு அது காதலாக மாறியது.

இதை அறிந்து கொண்ட ஸ்வாதியின் தந்தை சோமு ராஜ் தன் மகளை மீண்டும் கோவையில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதனால் ஸ்வாதி தன் காதலனுடன் பேச முடியாமல் விரக்தி அடைந்தார்.

இதனையடுத்து ஸ்வாதி தன் பிறந்தநாளன்று தன் காதலனுடன் பேச முடியாதலால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை விசாரணை நடத்திய போலீசார் ஸ்வாதி எழுதிவைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.