தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் இறந்துவிட்டார்

*மகேஷ் பாபுவின் அண்ணன் இறந்துவிட்டார்*

நடிகர் மகேஷ்பாபுவின் மூத்த சகோதரரும் நடிகருமான கட்டமனேனி ரமேஷ் பாபு சனிக்கிழமை அதாவது ஜனவரி 8ஆம் தேதி அன்று காலமானார். 56வது வயதில் தனது இறுதி மூச்சை பிரிந்துள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் பிஏ ராஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த துரதிர்ஷ்டவசமான செய்தியை உறுதிபடுத்தினார். ரமேஷ்பாபு நீண்டகாலமாக கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரமேஷ் பாபுவின் திடீர் மரணம் குறித்த செய்தியை ஒரு அறிக்கையில் மகேஷ் பாபுவின் குழு பகிர்ந்துள்ளார். “எங்கள் அன்புக்குரிய ரமேஷ் பாபு அவர்களின் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். அவர் என்றென்றும் நம் இதயங்களில் வாழ்வார். உங்கள் நலம் விரும்பிகள் அனைவரும் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும், தகனம் செய்யும் இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் – கட்டமனேனி குடும்பம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியானதும் மறைந்த நடிகருக்கு பல பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து அஞ்சலி செலுத்தினர். தற்போது மகேஷ்பாபுவிக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.