BB அல்டிமேட் மாஸ் என்ட்ரி கொடுத்த தாமரை

*BB அல்டிமேட்*

பிக்பாஸ் அல்டிமேட் கூடிய விரைவில் ஆரம்பமாகப் போகிறது, இதனை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, சந்தோசம், நகைச்சுவை கலந்த ஒரு என்டர்டைன்மென்டாக இருக்கும் அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரமும் Disney+ Hotstarஇல் ஒளிபரப்பப் போகிறார்கள்.

இதில் பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் நிறைய நபர்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் குறிப்பாக வனிதா, ஓவியா, ஜூலி போன்றவர்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று தகவல் வந்துள்ளது.

தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 5இல் கலந்துகொண்ட தாமரைச்செல்வி பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று தகவல் கூறுகின்றன. கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் தாமரைச்செல்வி வாரத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்கினார் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேடில் வாரத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக தாமரைச்செல்விக்கு வழங்கப் போகிறார்களாம்.

இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி Disney+ Hotstarஇல் வரும் ஜனவரி 30ஆம் தேதி ஒளிபரப்பாக போகிறது, 16 போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ளப் போகிறார்கள் மற்றும் இதையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கப் போகிறார்.

Leave a Comment