தளபதி விஜய் குடும்பத்திற்கு இருக்கும் அந்த எதிரி!

*தளபதி விஜய்*

நமக்கு கிடைத்த தகவலின்படி தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவரது சொத்துக்களை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் சிக்கலில் சிக்கியுள்ளார்

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பாக சேவியர் பிரிட்டோவின் ஆதம்பாக்கம் வீடு, அடையாறு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும் இந்த விஷயம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மொபைல் நிறுவனத்துடன் சேவியர் பிரிட்டோவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பு முக்கிய காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது தளபதி விஜயிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தியது நினைவிருக்கலாம். “பிகில்” படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வியாபாரம் குறித்து ஐடி துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடந்த விசாரணையில் விஜய்யின் “பிகில்” பாக்ஸ் ஆபீஸ் வசூல் உறுதிசெய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரம் நல்ல நிலைக்கு தள்ளப்பட்டது.

தற்போது தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். பூஜா ஹெட்ஜ், செல்வராகவன், யோகிபாபு மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளன.

அதேபோல் மாஸ்டர் திரைப்படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இயக்குனர் விஷ்ணுவரதனை வதைத்து படம் தயாரிக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது.