விஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகை ரஜினிகாந்துடன் நடிக்க சம்மதம்

*பிரியங்கா மோகன்*

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனிப் பெயரை பெற்றுள்ளார். கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்னும் திரைப்படத்தை இயக்கினார், அப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது.

டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனை நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார். தற்போது பிரியங்கா மோகன் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நெல்சன் திலீப் குமார் தற்போது இயக்கி வரும் தளபதி விஜயின் திரைப்படமான பீஸ்ட் படத்தில் பிரியங்கா மோகனை கதாநாயகியாக நடிக்கவைக்க ஆசையாக இருந்துள்ளார் ஆனால் அது முடியாமல் போக பூஜா ஹெட்ஜ் என்ற நடிகையை பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர.

இருப்பினும் பிரியங்கா மோகனை நெல்சன் திலீப்குமார் கைவிடவில்லை, தான் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கவிருக்கும் திரைப்படத்தில் பிரியங்கா மோகனை கதாநாயகியாக நடிக்க வைக்க உருதியாக உள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.