இவருக்கு பதில் இவர் தயாரிப்பாளர் முடிவு..!

*அஸ்வின்*

குக் வித் கோமாளி” சீசன்2 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் அஸ்வின். அஸ்வின் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ரெட்டைவால் குருவி” என்ற நாடகத்தில் நடித்துள்ளார். அதேபோல் பெரிய திரையிலும் ஓ காதல் கண்மணி, ஆதித்யா வர்மா போன்ற போன்ற படங்களில் சிறிய ரோலில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நான் கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என்று இன்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியது. பலரும் இவரை விமர்சித்து வெறுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் அடுத்த கட்டமாக அஸ்வின் குறித்து புதிய ஒரு சர்ச்சை வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குனர் ஒருவர் கதை சொல்லியிருக்கிறார். அந்தக் கதை இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடித்துவிட்டதால் அந்த கதையில் நடிக்க அஸ்வினை கேட்டுள்ளனர்.

அஸ்வின் அதற்காக ஒரு நட்சத்திர ஹோட்டலில் குறிப்பிட்ட ஒரு ரூம் நம்பர் சொல்லியிருக்கிறார். பின்பு அந்த ரூமை புக் பண்ணி வைத்துக் கொண்டு சென்று விடுங்கள் கதை கேட்க வருகிறேன் என்று அஸ்வின் கூறியுள்ளார். அவர்களும் அந்த ரூமை புக் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

பின்பு அந்த ஹோட்டல் அறைக்கு இயக்குனரை தயாரிப்பாளர் நிறுவனம் அனுப்பி வைத்திருக்கிறது. அந்த இயக்குனர் காலையிலிருந்து மாலை வரை அஸ்வினுக்காக காத்து இருந்திருக்கிறார் கடைசி வரை அஸ்வின் வரவே இல்லை. ஏனென்று அஸ்வினிடம் விசாரித்தபோது எனக்கு இன்று மூடு சரியில்லை நாளைக்கு மீட் பண்ணலாம் என்று அஸ்வின் கூறிவிட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பு நிறுவனம் இப்படத்தில் அஸ்வினுக்கு பதில் நடிகர் கவின் ஐ நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.