மிக பெரிய தொகையுடன் வெளியே வந்த போட்டியாளர்..?

*வெளியே வந்த போட்டியாளர்*

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்திற்கு முன் பணப்பெட்டியை கொடுத்து அதில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு கொடுப்பார்.

தற்போது இந்த சீசனிலும் இந்த வாய்ப்பு போட்டியாளர்களுக்கு கிடைத்துள்ளது. இதை யார் எடுத்துச் செல்லப் போகிறார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அந்தப் பெட்டியை சிபி எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் சமூக வலைதளங்கள் பரவி வருகிறது. இன்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில் அமீர் அந்தப் பெட்டியில் உள்ள பதினோரு லட்சத்தை எடுத்துச் செல்கிறேன் என்று சக போட்டியாளர்களுடன் கூடிப்பேசும் படியான காட்சி அமைந்திருந்தது.

ஆனால் தற்போது அதை சிபி 12 லட்சத்துடன் எடுத்துச் சென்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளிவருகிறது. இதனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிபி பிக்பாஸ் வீட்டில் ஒரு Tough Contestants என்று கூறலாம். பார்வையாளர்கள் அவருக்கு தங்களது ஆதரவை பெரிதும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிபி அந்தப் பெட்டியை எடுத்துச் சென்றது பலருக்கு விருப்பம் இல்லை என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment