90 வயது மூதாட்டியை விரட்டிய மருமகள்..?

*90 வயது மூதாட்டியை விரட்டிய மருமகள்*

மயிலாடுதுறை அருகே அரசு அதிகாரிகளின் அறிவுரைகளை மீறி 90 வயது மூதாட்டியை வீட்டை விட்டு விரட்டி உள்ளார் மருமகள்.

மகன்களும் கண்டுகொள்ளாத நிலையில் சொந்த வீடு இருந்தும் உணவுக்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மூதாட்டி.

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வானாதி ராஜபுரத்தை சேர்ந்தவர் தாவூத் பீவி 90 வயது மூதாட்டி ஆன இவருக்கு அஷ்ரப் அலி, ஷேக் அலாவுதீன் என்று இரு மகன்கள் உள்ளனர். கணவரை இழந்த இவர் தனது சொந்த வீட்டில் இளைய மகன் அஷ்ரப் அலியுடன் வசித்து வந்துள்ளார். மகன் வெளிநாடு சென்ற நிலையில் இளைய மருமகள் வீட்டை விட்டு விரட்டி உள்ளார் அதே ஊரில் வசித்து வரும் ஷேக் அலாவுதீன் ஆன மூத்த மகனும் மூதாட்டியை வீட்டிற்குள் சேர்த்துக்கொள்ளவில்லை.

இதனால் அக்கம் பக்கத்தினர் அளிக்கும் உணவை உண்டு வந்துள்ளார். கடந்த மாதம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாமிற்கு சென்ற மூதாட்டி தான் பெற்ற பிள்ளைகள் தன்னை கண்டு கொள்ளாமல் வீட்டை விட்டு விரட்டிவிட்டதாகவும் தன்னிடமிருந்த வீட்டையும் பிடிங்கி அவர்கள் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். ஒரு வேளை சாப்பாடு கூட தராமல் விரட்டி விட்டதாகவும் தனது வீட்டை மீட்டு கொடுக்கும்படியும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்திருந்தார் இல்லையென்றால் தன்னை கருணை கொலை செய்து விடும்படி கூறினார் இது அரசு அதிகாரிகளை கலக்கம் அடைய செய்தது.

இதைத்தொடர்ந்து மகன் அஷ்ரப் அலி வீட்டில் அரசு அதிகாரிகள் மூதாட்டியை ஒப்படைத்து பத்திரமாக பார்த்து கொள்ளும்படி அறிவுரை கூறினர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் சில நாட்களில் அஷ்ரப் அலி அந்த மூதாட்டியை இரக்கமே இல்லாமல் வீட்டை விட்டு விரட்டி உள்ளார். இதனால் அந்த மூதாட்டி கொட்டும் மழையில் நனைந்தபடியே அக்கம் பக்கத்து வீட்டில் உணவுக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தான் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அக்கம்பக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.