நண்பர்கள் எடுத்த முடிவு ஆம்புலன்ஸில் நடந்த திருமணம்

*ஆம்புலன்ஸில் நடந்த திருமணம்*

ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தன் திருமணம் முடிந்த பிறகு மணமகளுடன் ஆம்புலன்சில் ஊர்வலமாக சென்று தான் அந்த ஆம்புலன்ஸ் வாகனம் பறிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் காயங்குளத்தில் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் டிரைவராக ஒருவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்தது திருமணம் நடந்த கையோடு மணமகனை வீட்டிற்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றார்.

இதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன் பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை மணமகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது சைரன் ஒலிக்கச்செய்யப்பட்டது மற்றும் அவசர விளக்குகளும் எரிய விடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சங்கம் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க மோட்டார் வாகனத் துறையிடம் மனு அளித்தனர். உடனடியாக அந்த ஆம்புலன்ஸ் பறிக்கப்பட்டது மற்றும் ஓட்டுநரின் உரிமையும் பறிக்கப்பட்டது.

இனிமேல் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த வாகனத்தை ஆம்புலன்சாகப் பயன்படுத்த அனுமதி கிடையாது. அவசரத்திற்கு பயன்படும் வாகனத்தை அதற்குரிய மரியாதையை அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மணமகனுக்கு திருமணத்திற்க்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக மணமகனின் நண்பர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.