நாய் குட்டி என நினைத்து நரி குட்டியை வளர்த்த குடும்பத்தினர்..?

*நரி குட்டியை வளர்த்த குடும்பத்தினர்*

தென் அமெரிக்காவில் லீமா தலைநகரத்தை சேர்ந்த ஒரு குடும்பம் நாய் குட்டி என நினைத்து வீட்டில் நரி குட்டியை வளர்த்தனர்.

லீமா தலைநகரத்தை சேர்ந்த அந்த குடும்பத்திற்கு ஒரு நபர் சைபீரியன் ஹஸ்கிரக நாய் குட்டி என கூறி நரி குட்டியை விற்றுள்ளார்.

வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நரி குட்டி சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு தப்பித்து ஓடி விட்டது. அப்பகுதியில் வளர்க்கப்பட்ட கால்நடை விலங்குகளை அந்த நரி வேட்டையாட தொடங்கியதால் அந்த நரியை பிடிப்பதற்காக வனத்துறையினர் களம் இறங்கினர்.

நரியின் மோப்பசக்திக்கு புலப்பட்டு அதோடு பழகுவதற்காக நான்கு நாட்களுக்கு ஒரே ஆடையில் வனத்துறையினர் களம் வந்தனர். இறுதியில் அந்த நரி வனத்துறையுடன் பழகி நெருங்கி வந்தபோது அதன் மீது மயக்க ஊசி செலுத்திப்பிடித்தனர்.

தற்போது உயிரியல் பூங்காவில் வைத்து அந்த நரி பராமரிக்கப்பட்டு வருகிறது.