ஜெய் பீம் திரைப்படம் படைத்த புதிய சாதனை

*ஜெய் பீம்*

ஜெய் பீம் திரைப்படம் குறித்த வீடியோ Oscar அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ஜெய் பீம் பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் சிறந்த விருதான Oscar விருதுகளை வெல்வது படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அந்த Oscar யூடியூப் சேனலில் Scene At the Academy என்ற தலைப்பில் சில வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் பல பிரபலங்கள் நடித்து அனைவரின் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்ற ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகள் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஜெய்பீம் திரைப்படத்தின் சில காட்சிகளையும் படத்தின் இயக்குநர் அந்தப் படத்தைப் பற்றி பேசும் சில விஷயங்களையும் Oscar பகிர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவிற்கு இது மிகப்பெரிய கவுரவம் என்று சமுக வலைதளங்களில் அனைவரும் அந்த வீடியோவை பதிவிட்டு ஜெய்பீம் திரைப்படத்தை வாழ்த்தி வருகின்றனர். இந்தச் செய்தி அனைவரின் கவனத்தை ஈர்த்து வேகமாகப் பரவி வருகிறது.

Leave a Comment