RRR படத்தின் தொடக்கக் காட்சி திருட்டுத்தனமாக வெளியானது!

*RRR*

பிரபல இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி தனது வரவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு RRR மூலம் பார்வையாளர்களை வாழ்க்கையை விட பெரிய சினிமா அனுபவத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகிவிட்டார்.

இப்படம் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் அறிமுக காட்சிகளை ராஜமௌலி வெளிப்படுத்தியுள்ளார். இது பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

மும்பையில் RRR படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்த முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் படத்தின் ஆரம்ப காட்சிகளைப் பற்றி சிறிதாக கூறினர்.

இரண்டு நடிகர்களையும் நமது ராம் மற்றும் பீம் என்று அழைத்த பட இயக்குநர் “அவர்கள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இதற்கு முன்பு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியவர்கள் அவர்களின் நட்சத்திரம்தான் என்னை நட்சத்திர இயக்குநராக்கியது” என்று கூறினார்.

ஹீரோக்களின் அறிமுகக் காட்சிகளை பற்றி ஸ்பாய்லர் அளித்த ராஜமௌலி, நான் அவர்களை மிகவும் தொந்தரவு செய்தேன். தராக்கின் அறிமுக காட்சிக்காக அவரை பல்கேரியாவில் உள்ள காட்டில் சப்பல் இல்லாமல் ஓட வைத்தோம். புலி போல் அவர் ஓடினார். அதேபோல் ராம்சரணையும் 2000 பேருக்கு நடுவில் அவரை தள்ளி விட்டோம் அதில் வியர்வை, தூசி, இரத்தம் இருந்தது. என் கேரியரில் நான் எடுத்த சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று.

ஆலியா பாட் ,அஜய் தேவ்கன், ஸ்ரியா சரண் மற்றும் பலர் RRR படத்தில் குறிப்பிடத்தக்க வேடங்களில் காணப்படுவார்கள்