கார்ரின் உரிமையாளரே கார்க்கு குண்டு வைத்த சம்பவம்..!

*கார்க்கு குண்டு*

பின்லாந்தில் Tuomas Katainen என்பவர் Kymenlaakso என்ற பகுதியில் Jaala என்ற கிராமத்தில் வசித்து வருபவர். அப்பகுதி பனிக்கட்டியால் நிறைந்து சூழ்ந்த பகுதி அது.

Tuomas Katainen 2013 ஆம் ஆண்டு டெஸ்லா எஸ் ரக கார் வைத்துள்ளார். முதல் 1500 கிலோமீட்டர் கார் ஓடிய வரை ஒன்றும் பிரச்சனை தரவில்லை. பின்னர் கார் சில சிக்கல்களை தந்துள்ளது.

காரை சரி செய்வதற்காக சர்வீஸ் சென்டருக்கு Tuomas Katainen காரை எடுத்துச் சென்றுள்ளார். அவர்கள் சுமார் ஒரு மாத காலம் காரை சரி செய்ய முயன்றனர் ஆனால் முடியவில்லை இறுதியில் காரின் பேட்டரி தொடர்புடைய பகுதியை முற்றிலும் மாற்றினால் மட்டுமே கார் ஓடும் என்றும் அதற்கு 20 ஆயிரம் Euro தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் கடுப்பான Tuomas Katainen தனது டெஸ்லா காரை வெடிகுண்டு வைத்து தகர்க்க முடிவுசெய்தார். அதன்படி ஒரு நிறுவனத்தின் உதவியுடன் அவருடைய காரை சுற்றிலும் 30 கிலோ வெடிமருந்து பொருத்தப்பட்டது. பின்னர் அந்த டெஸ்லா கார் வெடித்து சிதறியது.

கார் வெடி வைத்து வெடித்த பிறகு அங்கே ஹெலிகாப்டரில் வந்து எலான் மஸ்க் குதிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன பின்பு எலான் மஸ்க் Tuomas Katainenயிடம் பேசுவது போலவும் காட்சிகள் அமைந்திருந்தன.

இவை அனைத்தையும் Pommijatkat என்ற யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பியது. எலான் மஸ்க் உலகம் முழுக்க எலக்ட்ரிக் கார்களை பிரபலப்படுத்த முயன்று வரும் நிலையில் Tuomas Katainen டெஸ்லா காரை வெடிக்க வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.