விண்கல் விழுந்து கோடீஸ்வரராகிய நபர்..?

*கோடீஸ்வரராகிய நபர்*

உலக மக்கள் எல்லோரும் விண்கல்லை நேரில் பார்த்தது கிடையாது. அது நேரில் பார்ப்பதற்கு முடியாது என்றே சொல்லலாம். ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் அதை நேரில் பார்த்திருக்கிறார்கள் ஆராய்ச்சியும் செய்திருக்கிறார்கள்.

விண்கல் பூமியில் எப்போது எங்கு விழும் என்று தெரியாது. அப்படி விழுந்தால் அது ஆச்சரியத்தில் ஒன்றாகும். தற்போது இப்படிப்பட்ட ஒரு ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியாவில் ஒரு நபர் வீட்டில் விண்கல் விழுந்துள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்தான் ஜோசுவா ஹுடகலங். இவர் பகல் நேரத்தில் தன் வீட்டிற்கு வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது திடீரென ஒரு வெடிச்சத்தம் அவர் வீட்டிற்குள் கேட்டுள்ளது அது என்னவென்று பார்ப்பதற்கு ஜோசுவா ஹுடகலங் சென்றுள்ளார்.

அப்போது அவரது வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு ஒரு கல் விழுந்து இருப்பதை பார்த்தார். அது பார்ப்பதற்கு கருப்பாகவும் அதிக சூடாகவும் இருந்தது இதை அவர் வின்கல் என்று புரிந்துகொண்டார்.

இதையடுத்து அந்த கல்லை தனது சமூக வலைதளங்களில் படமெடுத்து என் வீட்டில் வின்கல் விழுந்துள்ளது என்று பதிவு செய்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

நிறைய நபர்கள் அந்தக் கல்லை விலைக்கு கேட்டுள்ளனர். இறுதியில் ஜோசுவா ஹுடகலங் ஒரு அமெரிக்க நபரிடம் 200 மில்லியன் இந்தோனேஷியா பண மதிப்பில் விற்றார்.