விக் வைத்து ஏமாற்றிய நபர்..?

*விக் வைத்து ஏமாற்றிய நபர்*

தெலுங்கானாவில் தன் வழுக்கை தலைக்கு விக் வைத்து இளம்பெண்களை இன்ஸ்டாகிராம் மூலம் ஏமாற்றி பணம் நகையை சுருட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானாவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் முகமது ரபிக் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திக் வர்மா எனும் பெயரில் முடியில்லா தன் மண்டையில் விக் வைத்து தனது போட்டோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

இளம் பெண்கள் சிலரிடம் தான் வெளிநாட்டில் வேலை செய்து திரும்பி வந்தவன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களின் பொருளாதார ரீதியாக வசதியானவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி அவர்களிடமிருந்து பணம் நகை ஆகியவற்றை சுருட்டிக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

“பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” எனும் பழமொழி போல ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பெண் கார்த்திக் வர்மா என்னும் பெயரில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒருவன் நட்பாக பழகி 18 சவரன் தங்க நகைகள் 70 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டான் என்று எஸ் ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் விசாரணையில் அவன் விக் வைத்த ஷேக் என்பதை கண்டுபிடித்து அவனை சிறையில் அடைத்தனர்.

மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கும் ஷேக் முஹம்மது ரபீக் இதற்கு முன்னர் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் கூலி வேலை செய்து பிலைத்த வந்துள்ளான். மேலும் நான்கு பெண்களுக்கு இதுபோன்ற மோசடிகள் செய்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது போல நாம் எச்சரிக்கையாக இருந்தாள் யாராலும் நம்மை ஏமாற்ற முடியாது.