பால் வாங்க சென்று கோடீஸ்வரராக திரும்பிய நபர்!

*கோடீஸ்வரராக திரும்பிய நபர்*

அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியில் வடக்கு Chesterfieldஐ சேர்ந்தவர்தான் டென்னிஸ் வில்லோபி. இவர் தனது குழந்தைகளுக்காக Chocolate Milkshake வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

கடைக்கு சென்ற போது எதர்ஜியாக லாட்டரி டிக்கெட்டைப் பார்த்துள்ளார் அதை வாங்கியும் வந்துள்ளார். அந்த லாட்டரி டிக்கெட் அவருடைய தலையெழுத்தையே மாற்றி விட்டது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக அந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த லாட்டரி டிக்கெட்டில் அவருக்கு பரிசா $1 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. அந்தர லாட்டரி டிக்கெட்டில் அதிகபட்ச பரிசுத்தொகை அதுதான்.

டென்னிஸ் வில்லோபியிடம் நீங்கள் இந்த லாட்டரி டிக்கெட்டை கியூவில் நிண்டு காத்திருந்து வாங்கியுள்ளிர்களா என்று கேட்டுள்ளனர். அதற்க்கு அவர் “நான் என் குழந்தைகளுக்காக Milk Shake வாங்க சென்றிருந்தேன் அப்போது எதார்த்தமாக இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கினேன். இதில் இப்படி ஒரு அதிர்ஷ்டம் எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் நமக்கு யாருக்காவது அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று உணர்த்துகிறது.