தமிழகத்தையே உலுக்கிய உண்மை சம்பவம்..!

*உண்மை சம்பவம்*

செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு தமிழகத்தில் வேலூரில் உள்ள இளவம்பட்டி ஊரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே ஒரு சிறிய காலி இடம் உள்ளது அந்த இடத்தில் செப்டம்பர் 25-ஆம் தேதியன்று 24 வயதான திவ்யாவை மயக்க நிலையில் படுக்க வைத்து. அவள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர் எரியத் தொடங்கிய சில வினாடிகளில் சுய நினைவு வந்ததும் எரியும்போது எழுந்து கதறிக் கொண்டு ஓடினால்.

உடனடியாக அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் நெருப்பை அணைத்தனர் ஆனால் மிகுந்த தீக்காயம் ஏற்பட்டு அதனால் அவளை அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர் அதே நேரத்தில் அந்தப் பெண்ணுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு அவளது கணவர் ஒரு தகவல் அனுப்பினார்.

அதில் என்ன இருந்தது என்றால் எனக்கு எனது இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது அதனால் நான் சிறிது காலத்தில் இறந்து விடுவேன் எனது மனைவியை பிரிந்து என்னால் இருக்க முடியாது அதனால் அவளை கொன்று விட்டேன் பின்னர் சிறிது நாட்களில் நானும் எனது மூன்று வயது மகளும் தற்கொலை செய்து கொள்வோம் என்று அதில் இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த திவ்யா சிகிச்சை பலனின்றி 26 செப்டம்பர் அன்று உயிரிழந்தார்.

இந்த வழக்கின் உடைய முதல் குற்றவாளி திவ்யாவின் கணவர் சத்தியமூர்த்தி. போலீசார் அவனை வலைவீசி தேடினர். அதேநேரத்தில் போரூரில் நர்சிங் படித்த அர்ச்சனா என்ற பெண் காணவில்லை என்று போலீசில் அவரது பெற்றோர் புகார் அளிக்கின்றனர்.

போலீஸ் முதல்கட்டமாக அர்ச்சனா படித்த தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள சிசிடிவி கேமராவை காண்கின்றனர். அதில் பார்க்கையில் சத்தியமூர்த்தியும் அர்ச்சனாவும் ஒன்றாக வெளியே செல்வது போல் பதிவாகி இருந்தது சுத்திமுத்தி தேடுகையில் சத்தியமூர்த்தியின் மகிழுந்து கிடைக்கிறது. ஆனால் சத்தியமூர்த்தி மற்றும் அர்ச்சனா இருவரும் அவர்களது தொலைபேசியை ஆப் செய்து விடுகின்றனர் அதனால் காவல்துறையினரால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை.

அதேநேரத்தில் அர்ச்சனா பெற்றோர் சத்தியமூர்த்தியின் மீதுதான் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பிறகு சிறிது நாள் கழித்து சத்தியமூர்த்தியின் தொலைபேசி ஆன் செய்யப்படுகிறது அதில் வேறு ஒரு சிம்கார்டு பயன்படுத்தப்படுகிறது பின்னர் அதனை கண்காணித்த போலீசார் அவன் தஞ்சாவூரில் உள்ள ஒரு இடத்தில் இருக்கின்றான் என்று தெரியவருகிறது.

அங்கு சென்று காண்கையில் சத்தியமூர்த்தி மற்றும் அர்ச்சனா இருவரும் ஒரு வீட்டில் கணவன் மனைவி என்று குடியேறி உள்ளனர் அதுமட்டுமின்றி சத்தியமூர்த்தி, அர்ச்சனா மற்றும் சத்தியமூர்த்தியின் மூன்று வயது மகளும் அங்கே இருந்தனர். சத்தியமூர்த்தியை கைது செய்த போலீசார் பின்னர் விசாரிக்கையில் பல உண்மைகள் வெளிவந்தன.

சத்தியமூர்த்தி இளவம்பட்டி அருகே உள்ள ஒரு ஊரில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வந்துள்ளான். அதில் மூன்று வருடங்களுக்கு முன்னர் பயிற்சிபெற வந்து காதல் வயப்பட்ட அவள்தான் திவ்யா. இருவருக்கும் இடையே திருமணம் நடந்தது அதுமட்டுமின்றி மூன்று வயதில் ஒரு மகளும் பிறந்தது ஆனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மனஸ்தாபம் ஏற்பட்டு உள்ளது.

அதனால் சண்டை போட்டு விட்டு திவ்யா அவளது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுகிறாள். திவ்யாவின் உறவினரின் மகள்தான் அர்ச்சனா அவளும் சிறிது காலம் சத்தியமூர்த்தியின் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து உள்ளார் அதில் சத்தியமூர்த்தியின் ஆசை வார்த்தைகளால் காதல் வயப்பட்டாள். பின்னர் யாருக்கும் தெரியாமல் அர்ச்சனா வையும் சத்தியமூர்த்தி திருமணம் செய்து கொண்டார்.

அர்ச்சனா க்கும் சத்தியமூர்த்தி க்கும் இடையே ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்று உணர்கிறாள் திவ்யா. அதனால் திவ்யா சத்தியமூர்த்தியை போலீஸிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று கூறியுள்ளார் மற்றும் அர்ச்சனா திவ்யாவை விட்டு வந்தால் தான் உன்னை ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளால்.

இப்பொழுது சத்தியமூர்த்தியின் ஆசைக்கு இடையூறாக இருப்பது திவ்யா மட்டும் தான் அதனால் அவரை கொல்ல திட்டமிடுகிறான். அதற்காக திவ்யாவிடம் எனக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது என்று கூறியுள்ளான் உன்னை பிரிந்து என்னால் இருக்க முடியாது அதனால் நாம் மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளான்.

இதனை நம்பாத திவ்யா சத்தியமூர்த்தியை பிரிந்து அவளது பெற்றோர் வீட்டிற்கு சென்று உள்ளார். கடைசியாக செப்டம்பர் 23ஆம் தேதி அன்று சத்தியமூர்த்தி நான் தவறு இழைத்து விட்டேன் இனி உன்னோடு மட்டும் தான் இருப்பேன் என்று அர௲ச்சனாவிடம் கூறியுள்ளான். பின்னர் இருபத்தி ஐந்தாம் தேதி கோவிலுக்கு செல்வோம் என்று திவ்யா மற்றும் அவரது 3 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு டிரைவிங் ஸ்கூல் இருக்கு சென்றுள்ளான் அங்கு திவ்யாவிற்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து உள்ளான். பின்னர் மயங்கி விழுந்த அர்ச்சனாவை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான்.

அதன் பின்னர் போலீஸ் தன்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக தனது மொபைல் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து உள்ளான். பின்னர் அர்ச்சனாவிடம் சென்று திவ்யாவை விட்டு விட்டேன் இனி உன்னோடு வாழ்வேன் என்று ஊர் ஊராக சென்று உள்ளான். அதன் பின்னர் போலீஸ் அவனை பிடித்து விட்டது. இப்பொழுது சத்தியமூர்த்தி வேலூர் சிறைச்சாலையில் உள்ளான் அர்ச்சனா மற்றும் அவனது மூன்று வயது குழந்தை அரசு காப்பகத்தில் உள்ளது.