பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் திருட்டு தனமாக வெளியானது

*பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்*

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட், இப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லே ஆகியோர் நடித்துள்ளனர்.

பீஸ்ட் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார், சில நாட்களுக்கு முன் அரப்பிக்குத்து என்ற பாடலை படக்குழு வெளியிட்டனர். அப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது வைரலாகி டிரேண்டாகி வருகிறது.

தற்போது பீஸ்ட் படத்தின் சில புகைப்படங்கள் மற்றும் ஒரு பாடல் சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. அப்பாடலுக்கு செல்லம்மா என பெயரிட்டு யூட்யூப் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, இது ஒரு ரொமான்டிக் பாடல் என கருதப்படுகிறது, இதை தளபதி விஜய் பாடியுள்ளார் என்று அப்பாடலை கேட்ட நபர்கள் கூறிவருகின்றனர்.

Song Link – Beast.