இலங்கை அரசு கூறுகிறது 1 ரூபாய் கூட இல்லை

*இலங்கை அரசு*

சுற்றுலாவையே பிரதானமாக நம்பியிருக்கும் இலங்கை நாடு கொரோனாவின் பேரிடரில் சிக்கி உலகமே முடங்கிப் போக வருவாய் இல்லாமல் தடுமாறி நிற்கிறது. இலங்கை நாடு பெற்ற வெளிநாட்டுக் கடன் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

சீனாவிடமிருந்து மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 37 ஆயிரம் கோடிக்கு மேல் கடனாக பெற்றுள்ளது இலங்கை. இந்திய பெருங்கடலில் செல்வாக்கு செலுத்தும் சீனா அதன் ஒரு பகுதியாக இலங்கையை தன் பக்கம் ஈர்க்க கடன்களை வாரி வழங்கி தன் பொறியில் சிக்க வைத்துள்ளது.

அந்தக் கடன்கள் தான் தற்போது இலங்கை கழுத்தை நெரிக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் 3235 கோடி கடன் திருப்பி கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளது இலங்கை. ஆனால் ஒரு ரூபாய் கூட செலுத்த முடியாத நிலையில் இலங்கை தவிக்கிறது ஆகவே கடனை திரிப்பி கொடுக்க கூடுதல் கால அவகாசம் கிடைக்கும் வகையில் தவணைக் காலத்தை திருப்பி அமைக்குமாறு சீனாவிடம் இலங்கை மன்றாடுகிறது.

இலங்கை அரசு வசமுள்ள அன்னிய செலாவணிக் கையிருப்பு முற்றிலுமாக கரைந்து போயிவிட்டதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியம் பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. அதற்காக கடன் கேட்டு இந்தியாவை அணுகியது இலங்கை.

பெட்ரோலிய பொருள்கள் வாங்கியதற்காக ஈரானுக்கு வழங்க வேண்டிய கடனை அடைக்க பணம் இல்லாமல் மாதம் 37 கோடி மதிப்பிலான தேயிலையை இலவசமாக வழங்கி வருகிறது. மேற்கொண்டு இந்தியா, சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளிடமிருந்து உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இலவசமாக பெற்று வருகிறது.

இலங்கை நாடு மிக வேகமாக திவால் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அங்கு இருக்கும் பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். சீனாவிற்கான கடனை திருப்பி செலுத்த முடியாமல்தான் 2017 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட வேண்டிய கட்டாயமும் இலங்கைக்கு ஏற்பட்டது. இப்போதும் இலங்கையின் சொத்துக்களை சீனாவிற்கு அடமானம் வைக்க வேண்டிய நிலை ஏற்படுமா அல்லது சீனா கருணை காட்டுமா என்பதை உலகம் கவனித்து வருகிறது.