பூர்ணிமா ரவி உருவான கதை..?

*பூர்ணிமா ரவி*

பூர்நிம ரவி அக்டோபர் ஐந்தாம் தேதி 1998 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தார். இவர் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் தன் படிப்பை முடித்தார். இவருடைய ஆராத்தி ஆனந்தி என்னும் யூடியூப் சேனலில் போடும் வீடியோக்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் மேலும் இவரது சேனலுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர் இவருடைய துடிச்சலான நடிப்பிற்கும் இவருடைய அழகிய முகபாவனைகளும் பல ரசிகர்கள் உள்ளனர்.

ஒரு தனி பெண்மணியாக இக்காலத்தில் வெற்றி பெறுவது மிகவும் கடினமான ஒன்று ஆனால் ஒரு தனி பெண்மணியாக பல அவமானங்களை சந்தித்து பூர்ணிமா ரவி பல ரசிகர்களை சம்பாதித்துள்ளார். இவருடைய கஷ்டத்தையும் இவர் உருவான கதையும் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

பூர்ணிமா ரவி சாதிப்பதற்கு முன் நேர்ந்த கொடுமைகள். இவரது கல்லூரியின் நடன குழுவில் பூர்ணிமா ரவியும் ஒரு அங்கமாக இருந்து வந்தார். பூர்ணிமா ரவி சிறுவயதிலிருந்தே நல்ல நடன கலைஞர் அப்படி இருந்துவந்த சூழ்நிலையில் கல்லூரி நடன குழுவில் பூர்ணிமா ரவி முதல் வரிசையில் ஆடி வந்தார் அப்பொழுது ஒரு நாள் அவருடன் சேர்ந்து ஆடும் சகல தோழி நீ கருப்பாக இருக்கிறாய் அதனால் பின்னாடி சென்ற ஆடு என்று கூறியுள்ளார்.

ஆனால் கல்லூரி இறுதியாண்டு முடியும்போது பூர்ணிமா ரவியே அக்குழுவின் முன்னணி நடன கலைஞராக இருந்தார் தன்னை கருப்பு என்று கூறிய பெண்மணியிடம் சண்டை போடாத பூர்ணிமா ரவி தன் வெற்றியால் அவரை அசிங்கப் படுத்தினார்.

பூர்ணிமா ரவி கல்லூரி நாட்களில் நடனங்கள் ஆடியதனை அவரது தோழி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். பின்பு அந்த வீடியோவிற்கு நிறைய பார்வையாளர்கள் கண்டனர். அதன்பின்னர் பூர்ணிமாவை தொடர்ச்சியாக பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால் அவருக்கு நிறைய யூடியூப் சேனல்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் கோயம்புத்தூரில் ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.

சென்னையிலிருந்து யூடியூப் சேனல்கள் பலர் அவருக்கு வாய்ப்பு அளிக்க நினைத்து அவரை அழைத்தனர் ஆனால் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு மிகவும் தூரம் என்ற காரணத்தினாலும் இந்த வேலையை விட முடியாத காரணத்தினாலும் பூர்ணிமா ரவி அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்தார்.

பின்னர் ஒரு சிறிய பிரச்சனையினால் அவர் அந்த வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்தார். அதான் சென்னை வந்து விட்டோமே அதனால் ஐடி கம்பெனி வேலையுடன் ஒரு சிறிய யூடியூப் சேனலிலும் வேலை செய்து வந்தார்.

அவர் அந்த சேனலில் வேலை செய்து வெளியான அனைத்து வீடியோக்களும் பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றன. பிறகு சிறிது காலம் சென்றது திடீரென ஒரு நாள் அந்த ஐடி கம்பெனியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் காரணத்தினால் அந்த வேலையிலிருந்து பூர்ணிமா ரவி வெளியேறும் நிலை ஏற்பட்டது.

அவர் வேலை செய்த யூடியுப் சேனலிலும் ஒரு பிரச்சனையின் காரணத்தினால் நீக்கப்பட்டார். அவர் நண்பரது இல்லத்தில் தங்கினார் வாடகை கூட கொடுக்க முடியாத நிலையிலும் பசியால் தவிர்த்து சில காலங்கள் கழித்து வந்தார்.

பின்பு தனியாக அதை அவர் ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார் அதன் பெயர்தான் அராத்து ஆனந்தி அந்த சேனலில் வெளிவந்த அனைத்து வீடியோக்களும் பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றன பின்பு பூர்ணிமா ரவிக்கும் நிறைய ரசிகர்கள் ௳தித்தனர்.

பூர்ணிமா ரவி வெளியிடும் அனைத்து வீடியோக்களும் நிறைய பார்வையாளர்கள் காணத் தொடங்கினர் இப்பொழுது பூர்ணிமா ரவிக்கு மொத்தம் இருபத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உள்ளனர். அவர் யூடியூப் வீடியோக்கள் மட்டுமல்லாமல் பல குறும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் பூர்ணிமா ரவி.

பிரபலமான யூடியூப் சேனல் ஒன்று யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களுக்ககு விருது அளித்தனர். அந்நிகழ்ச்சியில் யூட்யூபில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பூர்ணிமா ரவிக்கு அளிக்கப்பட்டது. வாழ்க்கையில் அடைந்த கஷ்டத்திற்கும் ,அவரது இடைவிடாத உழைப்பினாலும் அவரது திறமையினாலும், அவரது அயராத விடா முயற்சியினாலும் அவர் இப்பொழுது ஒரு கலைஞராக வளர்ந்திருக்கிறார்.

திரும்பும் திசையெல்லாம் தோல்வியை சந்தித்த பூர்ணிமா ரவி சற்றும் மனம் தளராமல் வாழ்க்கையில் தன்னை அவமானப்படுத்திய அவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டி வருகின்றார்.