ட்வின் த்ரோட்லர்ஸ் உருவான கதை

*டிடிஎஃப் வசன்*

கோயம்புத்தூர் காரமடா பகுதியில் பிறந்தவர் தான் டிடிஎஃப் வசன். இவருக்கு சிறிய வயதிலிருந்தே பைக்கின் மீது ஆர்வம் இருந்தது அதனால் பைக் வாங்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பைக் வாங்கும் அளவிற்கு வருமானம் இல்லை.

தன் படிப்பை முடித்த பிறகு எப்படியோ தன் கனவான பைக்கை வாங்கினார். இவருக்கு பைக்கை பற்றி நிறைய விஷயங்கள் தெரியும் அதுமட்டுமில்லாமல் டிராவலிங் பண்ணுவது இவருக்கு மிகவும் பிடிக்கும்.

சம்பாதிக்க வேண்டிய வயதாகிவிட்டது ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்று யோசித்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு ஐடியா கிடைத்தது அதாவது ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதை ரன் பண்ணுவோம் அதில் வருமானம் கிடைக்கும் என்று ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்தார்.

வசன் தனது யூடியூப் சேனலில் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று விழாக் மற்றும் டிராவல் விழாக் வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் அப்லோட் செய்தார்.

அவரது வீடியோக்களை நிறைய நபர்கள் பார்க்க தொடங்கினர் அதனால் அவரது யூடியூப் சேனலை அதிகம் பேர் பின் தொடர்ந்தார்கள்.

வசன் யூடியூப் சேனலை பின்தொடர்பவர்கள் அவர் வீடியோக்களை பார்த்து அவருக்கு ரசிகர்கள் ஆக மாறி விட்டார்கள். வசன் தனது ரசிகர்களை பிடிஎஃப் என்றுதான் அழைப்பார்.

#தற்போது டிடிஎஃப் யூடியூப் சேனலை சுமார் 1 மில்லியன் க்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.