ஹிப் ஹாப் தமிழா ஆதி உருவான கதை..?

*ஹிப் ஹாப் தமிழா ஆதி*

ஹிப் ஹாப் தமிழாவை நிறுவியவர் ஆதித்யா ராமச்சந்திரன் அல்லது ஆதி. அவர் நடிப்பு மற்றும் இயக்கத் திறன் கொண்ட திறமையான இசைக்கலைஞர்.

குறுகிய காலத்தில் ஏராளமான ரசிகர்களை குவித்தவர். அவர் ஒரு சுயமாக உருவாக்கிய கலைஞர் மற்றும் அவர் இந்த நிலையை அடைய கடுமையாக உழைத்தார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கோவையில் பிறந்தார். அவருடைய வயது 31.

இவரது தந்தை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார், தாய் விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர்.

இவர்களது பூர்வீகம் தமிழ்நாட்டின் ஈரோடு சத்தியமங்கலம்.

பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். அவர் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் மாநிலத் தரவரிசைப் பெற்றவர். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார்.

அவர் மைக்கேல் ஜான்சனின் ‘ஜாம்’ இசையால் ஈர்க்கப்பட்டார் மற்றும் அவர் தனது பள்ளி நாட்களிலிருந்தே ஒரு சுயாதீன இசைக்கலைஞராக இருந்தார். அவர் உழைத்து பல பாடல்களை உருவாக்கினார்.

அவரது முதல் ஆல்பம் கிளப் லு மப்புல, பாடல் பிரம்மாண்ட வெற்றிப்பெற்றது. இந்தப் பாடலுக்குப் பிறகு ஆதியின் வாழ்க்கையே மாறிவிட்டது. அவரது ராப் பாடல்கள் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

பின்னர் அவர் நேரலை கச்சேரிகளை நிகழ்த்தினார் மற்றும் பல ஆல்பப் பாடல்களுக்கு இசையமைத்தார், அதன் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

*ஹிப் ஹாப் ஆதியின் வாழ்க்கை நிகழ்வுகள்*


ஹிப் ஹாப் தமிழா ஆதி வாய்ப்புக்காக அடைந்து கொண்டிருந்த காலத்தில் அவரைப் பலரும் தமிழ்நாட்டில் எல்லாம் சுயதீன இச களுக்கு பெரிய மதிப்பு கிடையாது என்று கூறி ஏளனம் செய்தனர் ஆனால் ஹிப் ஹாப் தமிழா ஆதி இதனை எல்லாம் கேட்டு சிறிதும் சோர்வடையாமல் முயற்சி செய்துகொண்டே இருந்தார் பின்னர் அவர் பாடி வெளியிட்ட பாடல் அனைத்தும் வெற்றி பெற்றன.

ஹிப் ஹாப் ஆதியின் கிளப்புல மப்புல பாடல் வெளியான காலத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது அதன் பின்னர் கௌதம் வாசுதேவ் மேனனின் துணை இயக்குனராக ஆக பணிபுரியும் ஒருவர் ஆதியை சந்தித்து என்னிடம் கதைகள் உள்ளன வா இணைந்து பணியாற்றுவோம் என்று அழைத்துள்ளார் ஆனால் ஆதி என்னிடமே பல கதைகள் உள்ளன நாம் இணைந்து செயல்படுவோம் என்று கேட்டுள்ளார்.

ஆதியை ஆர்வக்கோளாறு என்று எண்ணிக் கொண்டு துணை இயக்குனர் அந்த நிகழ்வினை அப்படியே கைவிட்டார். ஆதியின் வாடி புள்ள வாடி பாடல் வெளியாகி வெற்றியடைந்த பின்னர் பிரபல இயக்குனர் சுந்தர் சி ஆம்பள திரைப்படத்திற்கு அவரை ஒரு பாடல் இசை அமைத்து தருமாறு கேட்டார் ஆனால் அதற்குப் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஒரு பாடலுக்கு இசை அமைக்க முடியாது திரைப்படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்த ஆல்பமாக தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதனை ஒப்புக்கொண்டு சுந்தர் சியும் ஹிப் ஹாப் தமிழா ஆதி திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக நிறுவினார். அத் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி அடைந்தன. பின்னர் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து இயக்கிய திரைப்படம் தான் மீசைய முறுக்கு திரைப்படத்தை அவரே இயக்கி அவரே இசையமைத்து வெளியிட்டார்.

அத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதன் பின்னர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த மற்றும் இசை அமைத்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி படங்களாகவே மாறியது. தன்னை ஆர்வக்கோளாறு என்றும் தன்னால் வெற்றி பெற முடியாது என்றும் கூறி அவர்கள் மத்தியில் இப்ப பாதை வெற்றி பெற்று அவர்களை வாயடைக்கச் செய்து உள்ளார்.