12ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச SMS செய்த ஆசிரியர்

*ஆபாச SMS செய்த ஆசிரியர்*

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுமலை அருகே செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியின் தமிழாசிரியர் அசோக்குமார் அதே பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ்ஆப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் 1098 என்ற குழந்தைகள் உதவி எண் ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர்.

அதன் பெயரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கதிர்வேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.