உலகின் ஏழு நபர்களின் தேவையற்ற வீண் செலவு..?

*ஏழு நபர்களின் வீண் செலவுகள்*

ஏழாவதாக பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மார். இவர் சிரிக்கும் போது இவரது சிரிப்பு அழகாக இல்லை என்று அவர் நினைத்த காரணத்தினால். அவர் இந்திய மதிப்பில் 30 லட்சம் செலவு செய்து அவரது பற்களின் அமைப்பை மாற்றி இருக்கிறார்.

ஆறாவதாக இந்திய மட்டைப்பந்து விளையாட்டு வீரர் ஹர்திக் பாண்டியா. இவர் இரவு உறங்குவதற்கு அணியப்படும் இரவு ஆடையை மட்டும் சுமார் ஒன்றரை லட்சத்திலிருந்து 5 லட்சம் மதிப்பு வரை வாங்குவதாக கூறப்படுகிறது.

ஐந்தாவதாக இந்திய மட்டைப்பந்து அணியின் கேப்டன் விராட் கோலி. இவருக்கு அதிக மதிப்புடைய கடிகாரத்தை வாங்குவதற்கு மிகவும் பிடிக்கும். அதிக மதிப்புடைய கடிகாரம் எப்பொழுது புதிதாக வெளியானாலும் இவரும் உடனடியாக முன்பதிவு செய்து வாங்கிவிடுவார் என்று கூறப்படுகிறது.இவர் வைத்திருக்கும் மொத்த கடிகாரங்களின் மதிப்பு சுமார் 87 இலட்சத்திற்கும் மேல் என்பர். மற்றும் இவர் எப்பொழுதும் குடிப்பது கருப்பு தண்ணீர் அதில் அல்கலைன் என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது அந்த கருப்பு தண்ணீரின் மதிப்பு ஒரு பாட்டில் 40000 ஆகும்.

நான்காவது இடத்தில் அர்ஜென்டினா அணியின் கால்பந்து வீரர் மெஸ்சி ஆவார். இவரது பக்கத்து வீட்டில் அதிக சத்தம் வந்த காரணத்தினால் இவரது வீட்டின் அருகாமையில் ஒரு பெரிய சுவர் கட்டியுள்ளார். ஆனாலும் அதிக சத்தம் வந்து கொண்டிருந்த காரணத்தினால் அந்த வீட்டை 10 மடங்கிற்கு அதிகமாக பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

மூன்றாவது இடத்தில் போர்ச்சுகல் அணியின் கால்பந்து வீரர் ரொனால்டோ ஆவார். இவர் பல சொகுசு கார்களை வைத்துள்ளார். இவர் ஒரு நாளைக்கு ஆறு முறை உணவு உட்கொள்வார். ஒரு முறை சாப்பிடும் உணவின் இந்திய மதிப்பு சுமார் 70 ஆயிரம் ஆகும். இவரது மகளின் பிறந்தநாள் தினத்திற்காக 10 மதுபான குப்பிகளை வாங்கியுள்ளார். ஒரு மதுபானத்தின் விலை இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சத்திற்கும் மேல் என்பர்.

இரண்டாவது இடத்தில் பிரபல குத்துச்சண்டை விளையாட்டு வீரர் மைக் டைசன் ஆவார். இவருக்கு நாய் ,பூனை போன்று புலி வளர்ப்பதில் ஆர்வமாக இருந்தார் அதற்காக 2 பெங்கால் புலிகளை சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் செலவு செய்து 16 ஆண்டுகாலம் வளர்த்துள்ளார். பின்னர் அது அவர் வீட்டிற்கு வந்த நண்பனையே கடித்து விட்ட காரணத்தினாலும் அரசாங்கத்தின் உத்தரவை நாளும் அவர் புலி வளர்ப்பதனை கைவிட்டார். அந்த இரண்டு புலிகளின் உணவிற்காக அவர் மாதம் மாதம் சுமார் 3 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

முதலாவது இடத்தில் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஸ்டீபன் கரி ஆவார். மற்றவர்கள் விளையாடும்போது பொதுவாக சுவிங்கம் மென்று கொண்டே விளையாடுவார்கள் ஆனால் இவருக்கு பல்லை பாதுகாக்க பயன்படுத்தும் கிளிப்பை கடித்துக்கொண்டே விளையாடினால் தான் உன்னிப்பாக விளையாட முடியும் என்ற காரணத்தினால் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு கிளிப்பை கடித்துக்கொண்டே விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஒரு கிளிப்பின் விலை இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேல். ஒவ்வொரு போட்டிக்கும் இவர் ஒவ்வொரு பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது. இவர் பயன்படுத்தி போட்டப்பின் அந்த கிளிப் ஏழத்தில் குறைந்தபட்சம் 18 லட்சம் அளவிற்கு வாங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது போன்ற பல நட்சத்திரங்கள் தேவையில்லாத வீண் செலவு செய்கின்றனர். சந்தோசம் மகிழ்ச்சி என்பதெல்லாம் ஆடம்பர செலவில் இல்லை நாம் செய்த நல்லவை மற்றும் நம்முடன் இருக்கும் உறவுகள் இடமிருந்து மட்டுமே கிடைக்கும்