இந்த ஒரு படத்தில் மட்டும் 5 Camera-வ ஒடச்சாங்கலா

*5 Camera-வ ஒடச்சாங்கலா*

2021ல் வெளியான மலையாளத் திரைப்படம் Muddy, இந்த திரைப்படத்தை ப்ராகபால் என்னும் இயக்குனர் இயக்கியுள்ளார். இந்தியாவின் முதல் off-road mud raceஐ சம்பந்தப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இப்படத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ் மற்றும் அமித் சிவதாஸ் போன்ற நபர்கள் நடித்துள்ளனர். Muddy திரைப்படம் ஐந்து மொழிகளில் 2021 டிசம்பர் 25ஆம் வெளியாகியது (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம்).

Muddy திரைப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு விழாவில் “இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் இரண்டு வருடம் படத்தின் ஆர்ட்டிஸ்ட்களுக்கு பயிற்சி அளித்துள்ளார், ஒரு வருடம் லொக்கேஷன் தேர்வு செய்வதற்காக செலவிட்டுள்ளார்”.

“இந்த படத்திற்காக 13 அல்லது 16 கேமராக்களை பயன்படுத்தியுள்ளார், ஆங்கிலப் படத்தில் இது சாதாரணமாக நடக்கும் ஆனால் தமிழ் படத்தில் இதுவரைக்கும் நடந்ததற்கு வரலாறு கிடையாது. இதில் எத்தனை கேமராக்கள் உடைத்தார்கள் என்பது பற்றி தெரியவில்லை ஒரு ஐந்து அல்லது ஆறு கேமராக்கள் உடைந்தது என்று கூறினார்கள். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கு சூட்டிங் ஸ்பாட்டில் கதை எழுதாதீர்கள், டயலாக் எழுதாதீர்கள் இது தயாரிப்பாளர்களுக்கு நட்டம் தான்“.

“இவர்கள் படப்பிடிப்பு எடுத்த இடம் மலை Mudயானது. இதை எடுப்பதற்கு(மலைப் பகுதிகளில்) 80 நாட்கள் ஆனது என்று கூறினார், மலையில் ஏறுவதற்கு ஆறு மணி நேரம் அங்கு படப்பிடிப்பு எடுப்பதற்கு இரண்டு மணி நேரம் செலவாகியது” என்று கூறினார்.