இருக்கு ஆனா இல்ல பவம் அமிர்..!

*அமிர் பாவனி*

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது Freeze டாஸ்க் நடந்து வருகிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் அவர்களைப் பார்த்துவிட்டுச்செல்ல பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள்.

பிக் பாஸ் அமீருக்கு தனது வாழ்க்கைப் பயணத்தை பற்றி பேசுவதற்கு ஒரு வாய்ப்பு அளித்தார். அதில் அமீர் தன் வாழ்க்கையையும் அம்மா மரணத்தையும் கூறியது பலரை சோகம் அடைய வைத்தது. இந்நிலையில் பாவனியின் அம்மாவும் அவரது சகோதரியும் வீட்டிற்குள் வந்தனர். பாவனி அமிரை பற்றி பேசும்போது நான் குழம்பி இருப்பது போல் பதில் அளித்துள்ளார்.

பாவனியின் சகோதரி இங்குள்ள எல்லோரும் உனக்கு நல்ல நண்பர்கள் ஆனால் இங்குள்ள ஒரு ஆள் மட்டும் உனது பெயர் வெளியில் கெடுகிறது என்று கூறினார்.

அமிர்தான் அவர் என்று தன் சகோதரியிடம் கேட்டார். பின்பு பாவனி அமிரிடம் “நீங்கள் நீங்களாக இருங்கள் நான் நானாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளதாக அவர் சகோதரியிடம் குறிப்பிட்டார்.

அமிரின் வாழ்க்கை பயணத்தைக் கேட்ட அனைவரும் அமிருக்கு ஆதரவாக தற்போது மாறி உள்ளனர். அமிரின் காதல் வெற்றி அடையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.