தமிழகத்தில் இனி ஒரு ரவுடி கூட இருக்கக் கூடாது

*ரவுடி இருக்கக் கூடாது*

தமிழகத்தில் ரவுடிகளுடைய பட்டியல் தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்கவுண்டர் பட்டியல் தயாராகியுள்ளது இதனால் ரவுடிகள் மிகவும் அதிர்ச்சியாக உள்ளன.

சுட்டுத் தள்ளும் அளவிற்கு தமிழகத்தில் பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு டிஜிபி ஒரே இரவில் ரவுடிகள் எல்லோரும் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களுடைய பெயர்கள் பட்டியல்களை எடுத்தார். இரவு நேரங்களில் எல்லா இடங்களிலும் அதிரடி சோதனைகளை நடத்தி ரவுடிகளுக்கு பயத்தை காட்டினார்.

தற்போது இதே போல் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்னாடி செங்கல்பட்டு நகரத்தில் ஏற்பட்ட இரட்டைக்கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அந்த சமயத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடிகள் தாக்கியுள்ளனர். தற்காப்புக்காக தான் அவர்களை நோக்கி காவல்துறையினர் நான்கு ரவுண்டுகள் சுட்டதால் வடக்கு மண்டல ஐஜி அவர்கள் கூட ஒரு விளக்கத்தை கூறியிருந்தார்.

இதற்கு அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது இதனால் ரவுடிகளை ஒடுக்க வேண்டும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முக்கியமான ஒரு வேளையை காவல் துறையினர் செய்தனர். இதனைத்தொடர்ந்து இதில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று சோதனையிட்டு கண்டுபிடித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி ஜாமீனில் வெளியே வந்த படப்பை குணா தலைமறைவு என்ற செய்தி வந்தது இதனால் குணாவுடைய ஆதரவாளர்களை கைது செய்ய காவல்துறையினர் பழைய வழக்கை எடுத்து விசாரணை செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தான் மாணிக்கு இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பக்கத்திலுள்ள மண்ணூர் பகுதியில் பழைய இரும்பு கடை வியாபாரம் நடத்தி வருகிறார். திடீரென்று பிரபல ரவுடியான படப்பை குணா தன்னுடைய கூட்டாளிகளுடன் அந்த பழைய இரும்புக் கடைக்கு சென்று இந்த கடை நடத்த வேண்டும் என்றால் மாதம் 50 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இப்படி சிறு சிறு நிறுவனங்களை மிரட்டி பணம் பெறுவது காவல்துறைக்கு தெரிந்ததால் இப்போ ஒவ்வொரு பட்டியலையும் தயாரிக்கின்றனர். நேற்று கூட படப்பை குணாவின் மனைவியை கைது செய்துள்ளனர். 42 வழக்குகளில் தொடர்புடைய காரணத்தினால் இப்போது கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி தமிழகத்தில் பல பகுதிகளில் அமைதியை காப்பதற்காக, ரவுடிகளை குறைப்பதற்காக தமிழ்நாடு அரசு தற்போது தீவிரமாக கண்காணித்து மற்றும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எங்கெல்லாம் ரவுடிகள் அதிகமாக இருக்கிறார்களோ, எங்கெல்லாம் கலவரங்கள் இருக்கிறதோ, தொழில் துறைகளை எங்கெல்லாம் மிரட்டுகிறார்களோ அங்கு தகுந்த பாதுகாப்பு கொடுத்து நடவடிக்கை எடுக்க இப்போ தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் அதுமட்டுமில்லாமல் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், இந்த மாரி ரவுடிகளின் பட்டியலை தயாராக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.