இந்தியர்கள் அதிகமாக சாப்பிடும் ஸ்நாக்ஸ் இதுவா

*அதிகமாக சாப்பிடும் ஸ்நாக்ஸ்*

இந்திய மக்கள் அதிகமாக ஒரு பொருளை தினமும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். காலை மதியம் மாலை இரவு போன்ற நேரங்களில் இதனை நொறுக்குத் தீனி போல் சாப்பிட்டு வருகின்றனர்.

இது நீங்கள் நினைப்பது போல் ஸ்நாக்ஸ் கிடையாது Dolo-650 என்கிற மாத்திரை பொருள் தான். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படும் வார்த்தை Dolo-650. நம்மை சுற்றியிருக்கும் பாதி நபர்களுக்கு காய்ச்சல் அல்லது சளி பிடித்தால் உடனே மருந்தக கடைக்குச் சென்று Dolo-650 வாங்கி சாப்பிட்டு விடுகின்றனர்.

இந்த Dolo-650 மத்திரை கொரோனா காலம் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை சுமார் ரூபாய் 567 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதனுடைய விற்பனை உச்சத்தில் இருந்தது.

காய்ச்சல், வலி, வீக்கம் இவைகளுக்காக தரப்படும் நவீன மருந்து தான் Paracetamol. 1857ல் கண்டுபிடிக்கப்பட்டு பரவலாக உபயோகிக்கப்பட்டு இப்போது கடந்த 50 வருடங்களாக பிறந்த குழந்தை முதல் 80 அல்லது 90 வயதான முதியவர் வரை எல்லா வலிகளுக்கும் தைரியமாக வழங்கப்படும் இந்த Paracetamol மாத்திரை.

இந்த மருந்திற்க்கும் அலர்ஜி போன்றவற்று எல்லாம் இருக்கிறது. அலர்ஜி இருப்பவர்கள் இதைத் தவிர்த்துக் கொள்ளலாம் மற்றவர்கள் இதை சாப்பிடுவதில் எந்த ஆபத்தும் இல்லை. இதை ஒரு நாள் எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் ஒரு வேளை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்று அளவு தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு கிலோ எடைக்கு 10 மில்லி கிராம் Paracetamol பயன்படுத்தலாம். ஒரு நாளிற்க்கு 4 கிராம் எடுத்துக்கொள்ளலாம் அதற்குமேல் கூடாது அப்படி எடுத்துக் கொண்டால் அது உறுப்புகளை பாதிப்படையச் செய்யும். Micro Lab Limited என்கிற நிறுவனம்தான் இந்த Dolo-650 மாத்திரைகளை கண்டுபிடித்துள்ளனர்.

Dolo-650 மாத்திரையை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் எல்லோருக்கும் இது பொருந்தாது, ஒருவருடைய உடம்புக்கு ஏற்ப இந்த மாத்திரையை உடைய ஆற்றல் மாறும் அதனால் எந்த மாத்திரை இருந்தாலும் டாக்டருடைய பரிந்துரைக்கு ஏற்ப எடுத்துக் கொள்வது சிறந்தது.