என்ன வச்சு Views வாங்குறாங்க..?

*அஸ்வின் குமார்*

குக் வித் கோமாளி” சீசன் 2 மூலம் பிரபலமானவர் தான் அஸ்வின் குமார். இவர் சீரியல், ஆல்பம் சாங்ஸ் மற்றும் சில படங்களிலும் நடித்துள்ளார். “என்ன சொல்லப் போகிறாய்” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் இது இவர் கதாநாயகனாக நடித்துள்ள முதல் படமாகும்.

என்ன சொல்ல போகிறாய்” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அஸ்வின் குமார் பேசியதை சர்ச்சைக்குள்ளானது. இதனால் சமூக வலைதளங்களில் அதிகமா Troll செய்யப்பட்டு வருகிறார். இவர் இத்தனை வருடமாக சம்பாரித்த நல்ல பெயர் அனைத்தும் ஒரே நாளில் காணாமல் போய்விட்டது.

அந்த இசை வெளியீட்டு விழாவில் நான் கிட்டத்தட்ட 40 கதைகள் கேட்டுள்ளேன் அது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என்று பேசியுள்ளார். இதனால் பலரும் அவர் மேல் கடுப்பாகி கேலியும் விமர்சனங்களையும் செய்து வருகின்றனர்.

இதனையடுத்து அஸ்வின் நான் தெரியாமல் கூறிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு வீடியோவை வெளியிட்டார். அஸ்வினின் இந்த பேச்சால் “என்ன சொல்லப் போகிறாய்” திரைப்படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது சமூக வலைதளங்களில் அவரின் இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது. நான் எது பேசினாலும் டிரண்ட் செய்துவிடுகிறார்கள் மில்லியன் வியூஸ் சீக்கிரமாக போய்விடுகிறது. நான் மிகவும் பெரிய பிரஷரில் உள்ளேன். என்னை நம்பி தயாரிப்பாளர் பணம் போட்டு இருக்கிறார் இந்த மாதிரியான நிறைய பயங்கள் எனக்கு உள்ளது என்று பேசியுள்ளார்.