இது வீடா இல்லை நகை கடையை 750 சவரன் திருட்டு..!

*750 சவரன் திருட்டு*

அறந்தாங்கி பக்கத்து ஊரில் பூட்டியிருந்த வீட்டில் பாதுகாப்பு கருதி அட்டைப்பெட்டியில் 750 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கோபால பட்டினத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் Brunei நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

ஜாபர் சாதிக் குடும்பத்துடன் Bruneiஇல் வசித்து வருகின்றார். கோபாலப்பட்டினத்தில் உள்ள வீட்டை அவரது அக்கா சாயிஷா பராமரித்து வந்துள்ளார்.

மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கத்தில் இரவு நேரத்தில் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். வீட்டின் பீரோவில் எதுவும் கிடைக்காத நிலையில் வீடு முழுக்கவும் தேடி பார்த்துள்ளனர். பிறகு அட்டைப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 2 தனிப்படை இதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.