உண்மையான மின்னல் முரளி இவர்தான்..!

*மின்னல் முரளி*

இந்தோனேசியாவில் 35 வயது மதிக்கத்தக்க நபர் மீது மின்னல் தாக்கி தீப்பொறி பறந்தன ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நபர் உயிர் பிழைத்தார்.

நம்மில் பல பேருக்கு தூரத்திலிருந்து இடி சத்தத்தைக் கேட்டாலே உடல் நடுங்கும். இடி மின்னலின் போது வீட்டை விட்டு வெளியே செல்வது எப்போதும் பாதுகாப்பு இல்லாதது என்று முன்னோர்கள் பெரியவர்கள் எச்சரித்தது உண்டு.

பனை மரத்தின் மேல் மின்னல் விழுந்து தீப்பிடித்து முற்றிலுமாக கருகியது என்று பல செய்திகளில் அல்லது சில நேரங்களில் நேரில் கூட நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.

இப்படி மரமே முழுமையாக எரிந்து சாம்பலாகும் நிலையில் மின்னல் தாக்கி ஊழியர் ஒருவர் உயிர் பிழைத்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் மின்னல் தாக்கினாலும் மனிதர் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் அதிஷியமாகவே பார்க்கப்படுகிறது. மின்னல் தாக்கி தீப்பொறிகள் பரந்தும் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையிலும் அந்த நபர் உயிர் பிழைத்துள்ளார்.

இந்தோனேசியா நாட்டில் ஜகார்த்தா என்னும் நகரின் வடகிழக்குப் பகுதியில் கனரக இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பணிகள் நடந்து கொண்டிருந்தபோது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது கையில் குடை பிடித்துக்கொண்டு நடந்து சென்ற 35 வயது மதிக்கத்தக்க தொழிலாளி மீது திடீரென மின்னல் தாக்கியது.

மின்னல் தாக்கி தீப்பொறி கிளம்பிய நிலையில் சுருண்டு விழுந்த தொழிலாளிக்கு உடலில் லேசான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. இதனைப் பார்த்து ஆச்சரியமடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த ஊழியர் வைத்திருந்த வாக்கி-டாக்கி மின்னலை ஈர்த்து இருக்கலாம் என கூறப்படுகிறது.