BB சீசன் 5 -யின் வெற்றியாளர் இவர்தான்

*BB சீசன் 5 -யின் வெற்றியாளர்*

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதியாக முடிந்துள்ளது. இதில் பல பிரபலமுள்ள போட்டியாளர்கள் அறிமுகமில்லாத போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இறுதி வாரத்திற்கு ஐந்து போட்டியாளர்கள் நிரூப், பாவணி, அமீர், பிரியங்கா மற்றும் ராஜூ.

பிக் பாஸ் ஃபைனல் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்தது ஆனால் தற்போது கொரோனாவின் பரவலால் தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் பிக் பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியை நேற்றைய தினம் சனிக்கிழமை அன்று நடத்தினர்.

இந்த வாரத்தில் இறுதிப் போட்டியாளராக வெளியேறினார் நிரூப். இதில் பாவனி, அமீர் மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்தனர். இறுதியாக இரண்டு போட்டியாளர்களாக ராஜு மற்றும் பிரியங்கா இருந்தனர்.

இதில் பிரியங்காவை விட சில ஓட்டுகள் அதிகம் பெற்று ராஜு வெற்றிபெற்றார். இதனால் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளராக ராஜு அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பு இன்று விஜய் டிவியில் மாலை ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment