இந்த மனிதன் ஒருபோதும் சாக மாட்டான்!

*இந்த மனிதன் ஒருபோதும் சாக மாட்டான்*

65 வயதான லெவோன் “நான் ஒருபோதும் இறக்க மாட்டேன் என்கிறார்“.

ஆனால் அவரைப் பார்க்கும் போது அவர் உண்மையில் இறக்கப் போகிறார் என்று தெரிகிறது.

லெவோன் வெள்ளை முடி மற்றும் கலைந்த ஆடைகள் உடைய ஓய்வு பெற்ற முதியவர். ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தனது கடைசி நாளுக்காகக் காத்திருந்தார். ஆனால் இல்லை!

இந்த முதியவர் வயதாக இருந்தாலும் ஆர்மீனியாவின் மிகவும் பிரபலமான ரோலர் ஸ்கேட்டர் மற்றும் அவரது ஸ்கேட் பாதை நெடுஞ்சாலையாகும்.

தினமும் ஹெல்மெட் அணியாமல், கார்களுக்கு பயப்படாமல், விபத்துகளுக்கு பயப்படாமல், போலீசாருக்கு பயப்படாமல் நெடுஞ்சாலையில் ரோலர் ஸ்கேட்டர் மூலம் சறுக்குகிறார்.

இதற்காக மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அவர்கள் அவரை நேசிக்கிறார்கள் மற்றும் போலீசார் அவருடைய நண்பர் என்று கூறுகிறார்கள்.

லெவோன் ஒவ்வொரு நாளும் பயமின்றி வாழ்கிறார். லெவோன் கூறுவது “நீங்கள் மரணத்திற்கு பயப்படாவிட்டால் மரணம் உங்களை விட்டு விலகி இருக்கும்“.

அந்த மனநிலை இவரை ஏஜ்லெஸ் ஆக்குகிறது.