இந்த வாரம் வெளியாக இருக்கும் படங்கள்

இப்பதிவில் இந்த வாரம் இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகக் கூடிய திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

தமிழ் திரைப்படங்கள்

மன்மத லீலை

அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம். மேலும் இப்படத்தில் ரியா சுமன், சம்யுக்தா ஹெட்ஜ், ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் அளித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

செல்ஃபி

ஜிவி பிரகாஷ் நடிப்பில் மதி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் செல்பி, மேலும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், வர்ஷா பொல்லம்மா, வித்யா பிரதீப், சுப்பிரமணியம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

இடியட்

சிவா மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் மற்றும் ராம்பால இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இடியட், இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும்.

English திரைப்படம்

மோர்பியஸ்

சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மோர்பியஸ், இப்படத்தினை டேனியல் எஸ்பினோசா இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது.