நேரம் சரியில்லை அஸ்வின் குமார்!

*அஸ்வின் குமார்*

என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் இசைவெளியீட்டு வெளியீட்டு விழாவில் படத்தின் ஹீரோ அஸ்வின் குமார் பேசியதே பார்த்தவர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அஸ்வின் குமார் இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்லும் போது அது பிடிக்காவிட்டால் நான் தூங்கி விடுவேன் என்றார் அதைப் பார்த்துவிட்டு பலரும் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை எவ்வளவு திமிராக பேசுகிறார் பாருங்கள் இன்று சமூக வலைதளங்களில் கண்டனமும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அஸ்வின் குமார் இதுகுறித்து கூறுகையில் “சந்தோஷத்திலும் மேடையில் பேசும் பதட்டத்திலும் இருந்தேன் கைகால் நடுங்கிக் கொண்டிருந்த போது திமிராக எப்படி பேச முடியும்? எனக்குத் திமிர் எல்லாம் இல்லை நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் சாதித்த பிறகும்கூட ஆணவமே வராது. என்னை பற்றி வந்திருக்கும் மீம்ஸுகளை பார்த்த போது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது”.

இப்படி தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு பர்சனல் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நண்பர்களிடம் நான் விளையாட்டாக சொல்லுவதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு ஏண்டா திட்டுற என்று கேட்டதுண்டு “எல்லாம் என் நேரம்“.