இன்றைய ஐபிஎல் நேரடி போட்டி RCB vs PBKS

*RCB vs PBKS*

ஐபிஎல் 2022 போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது, கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிகளை பெரும் எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்து வருகின்றனர்.

இன்றைய போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பஞ்சாப் கிங்ஸ் இரு அணிகளும் இரவு 7:30 மணிக்கு மும்பை DY Patil ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனக்கு கேப்டன்ஷிப் பதவி வேண்டாம் என்று கோரி கேப்டன்ஷியில் இருந்து விடைபெற்றார், இதனால் பெங்களூர் அணி ஏலத்தில் முன்னாள் சென்னை அணியின் வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் ஐ வாங்கி தற்போது கேப்டன்ஷிப் பதவியை கொடுத்துள்ளனர்.

அதே சமயம் பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் கே எல் ராகுல் அணியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார், இதனால் மயங்க் அகர்வால் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக பதவி ஏற்றுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இன்று விளையாடக்கூடிய நபர்கள்(Probably XI)

ஃபாஃப் டு பிளெசிஸ்(C), அனுஜ் ராவத், விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(WK), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இன்று விளையாடக்கூடிய நபர்கள்(Probably XI)

மயங்க் அகர்வால்(C), ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங்(WK), லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சே, ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ஹர்ப்ரீத் ப்ரார், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

ஐபிஎல் போட்டியை நேரடி(Live) பறக்கக்கூடிய தளங்கள்:

Live Streaming – டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்
ஜியோ டிவி

ஐபிஎல் போட்டி Score பறக்கக்கூடிய தளங்கள்:

Live Score – @espn and @cricbuzz