இன்று ஐபிஎல் நேரடி போட்டி Csk vs Kkr

*CSK vs KKR*

15வது எடிஷன் ஆன ஐபிஎல் டோர்னமெண்ட் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்றன. தற்போது இந்த வருடம் கொரோனாவின் பரவல் குறைந்திருப்பதால் இந்தியாவில் மும்பையை சேர்ந்த சில மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

ஐபிஎல் திருவிழா ஆரம்பிப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். டோர்னமெண்ட் இன் முதல் போட்டி கடந்த வருடம் இறுதிப் போட்டிகள் விளையாண்ட சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் ஐபிஎல் ஏலத்தில் சில நல்ல பெயர்களை வாங்கி குவித்தனர். சென்னை அணி ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி என்பது எம்எஸ் தோனி கேப்டன்ஷியில் இருந்து விலகியது தான் அவருக்கு பதில் தரப்போவது ஜடேஜா கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். அதேசமயம் கொல்கத்தா அணி முன்னாள் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் பெரும் தொகைக்கு எடுத்து கேப்டன்ஷிப் பதவி கொடுத்து உள்ளார்கள்.

சென்னை அணியில் இன்று விளையாடக் கூடிய நபர்கள்(Probably XI)

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா(C), தோனி(WK), கிறிஸ் ஜோர்டன், டுவைன் பிராவோ, துஷார் டெஸ்பாண்டே, ஆடம் மில்னே

கொல்கத்தா அணியில் இன்று விளையாடக் கூடிய நபர்கள்(Probably XI)

வெங்கடேஷ் ஐயர், ரஹானே, ராணா, ஷ்ரேயாஸ் ஐயர்(C), சாம் பில்லிங்ஸ்(WK), ஜாக்சன், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், சிவம் மாவி, உமேஷ், வருண் சக்ரவர்த்தி

சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் போட்டி இன்று 7:30 மணிக்கு மும்பை வங்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது, இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் போட்டியை நேரடி(Live) பார்க்கக்கூடிய தளங்கள்:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்(OTT)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்ஸ்
ஜியோ டிவி