Teslaவை மிஞ்சும் டிராக்டர்..?

*டிராக்டர்*

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் பழமொழி இவருக்கு பொருந்தும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரான் என்னும் நகரை சேர்ந்தவர்தான் யோகேஷ் நாகர்.

யோகேஷ் நாகர் ஒரு வித்தியாசமான டிராக்டரை கண்டுபிடித்துள்ளார். அந்த டிராக்டர் டிரைவர் இல்லாமல் இயங்க கூடிய ஒன்று. அதாவது ஆட்டோமேட்டிக்காக செயல்படக் கூடும்.

யோகேஷ் நாகருடைய அப்பா ஒரு விவசாயி. அவர் தினமும் தன்னுடைய டிராக்டரில் விவசாயம் பார்த்துக் கொண்டு வருவார். அவர் எப்போது அந்த டிராக்டரை எடுத்து வயலில் ஓட்டுகிறார் போதெல்லாம் அவருக்கு வயிற்றுவலி ஏற்படும். இதனால் அவரால் விவசாயம் பண்ண இயலவில்லை.

இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று யோகேஷ் நாகர் ஒரு யோசனை செய்கிறார்.

அவர் யோசனை என்னவென்றால் ரிமோட் கண்ட்ரோலில் டிராக்டரை இயங்க வைக்க வேண்டும் என்பதுதான்.

ஒருவழியாக யோகேஷ் நாகர் ரிமோட் மூலமாக இயங்கும் டிராக்டரை உருவாக்கினார். அதற்க்கு டிரைவர் தேவை இல்லை. அந்த டிராக்டரில் வரும் கியர், பிரேக், ஆரன், ஸ்டேரிங் போன்றவற்றை ரிமோட் மூலமாக இயக்கலாம்.

இந்தப் படைப்பை வைத்து யோகேஷ் நாகருடைய அப்பா தனது 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

என்னதான் Tesla கார், டிரைவர் லெஸ் ட்ரக் போன்ற தொழில்நுட்பங்கள் வந்தாலும் இந்த ஒரு 19 வயது பையன் எந்த ஒரு பெரிய தொழில்நுட்பம் இல்லாமல் செய்த இந்தப் படைப்பை பாராட்டியே ஆக வேண்டும்.

Leave a Comment