அஷ்வின் வாழ்க்கையில் நடக்கும் சோகம்?

*அஷ்வின்*

குக் வித் கோமாளி” சீசன் 2 மூலம் புகழ் பெற்றவர் அஸ்வின் குமார். சில நாட்களுக்கு முன்பு அவர் நடித்து வெளியாக உள்ள “என்ன சொல்ல போகிறாய்” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அஸ்வின் குமார் பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அவர் அப்படி பேசியதால் பலரும் அவரை விமர்சித்து திட்டியும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். இதனால் இவர் தமிழ் சினிமாவில் நீடிப்பாரா என்பதே சந்தேகம் ஆகிவிட்டது.

அஸ்வின் குமார் நிறைய மியூசிக் ஆல்பங்கள், ஷார்ட் ஃபிலிம்கள் மற்றும் சிரியல்களிலும் நடித்துள்ளார். எல்லாராலும் புகழப்பட்டு வாழ்த்து பெற்று வந்தவர் அஸ்வின். ஆனால் தற்போது அவர் வாயாலேயே அவர் தன் மரியாதையை கெடுத்துக் கொண்டார்.

என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது யாருக்கும் பிடிக்கவில்லை எல்லோரும் அவரைக் கிண்டல் செய்தும் வெறுத்தும் வருகின்றனர்.

இதனால் அஸ்வின்குமார் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஒரு வீடியோவை வெளியிட்டார் ஆனால் அதை எல்லோரும் நடிப்பு என்று மறுத்துவிட்டனர்.

சமீபத்தில்கூட ஒரு தயாரிப்பு நிறுவனம் அஸ்வினை வைத்து படம் எடுக்க விரும்பியுள்ளனர் ஆனால் தற்போது அஸ்வின் நடவடிக்கை பார்த்து அந்த வாய்ப்பை அஸ்வினிடம் இருந்து பிடுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவரை நம்பி அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் பின் வாங்குவதால் அஸ்வின் குமார் நாம் சினிமாவில் நிலைப்போமா என்ற கவலையில் உள்ளார்.