ஏஆர் ரஹ்மான் வீட்டில் டும் டும் சத்தம்..!

*ஏஆர் ரஹ்மான்*

இசைப்புயல் ஏஅர் ரஹ்மான் இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தத் துறையில் ஆட்சி செய்து வருகிறார். தனிப்பட்ட முறையில், அவர் சாய்ராபானுவை மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு கதீஜா ரஹ்மான் மற்றும் ரஹிமா ரஹ்மான் என்ற மூன்று மகள்கள் மற்ற மகன் அமீன் ரகுமான் உள்ளனர்.

ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா ரஹ்மானுக்கும் ஃபயாஸூக்கும் டிசம்பர் 23ஆம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. covid-19 கட்டுப்பாடுகள் காரணமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

திருமண தேதியை இருவீட்டாரும் முடிவு செய்து விரைவில் அறிவிக்கும் என தகவல் வெளிவந்துள்ளது. கதீஜா தனது 14-வது வயதில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்‘ திரைப்படத்தில் ‘புதிய மனிதா‘ பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பல்வேறு தளங்களில் தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.