வலிமை நீக்கப்பட்ட காட்சி

*வலிமை நீக்கப்பட்ட காட்சி*

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தினை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார், Bayview Project LLP இன் கீழ், Zee Studios உடன் இணைந்து, இணை தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் போனி கபூர் தயாரித்துள்ளார்.

ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி ஜே, சுமித்ரா, ராய் அய்யப்பா, சைத்ரா ரேட்டி, புகழ், யோகி பாபு, துருவன், தினேஷ் பிரபாகர், செல்வா, ஜி.எம் சுந்தர், அச்யுத் குமார், பவீல் நவகீதன், கார்த்தி ராஜா ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தற்போது வலிமை படத்தினுடைய நீக்கப்பட்ட காட்சிகள் யூட்யூப் தளத்தில் Moviebuff Tamil சேனலில் ஒவ்வொன்றாக வெளியாகி உள்ளது, தற்போது வரை இரு நீக்கப்பட்ட காட்சிகள் வலிமை படத்திலிருந்து வெளியாகியுள்ளது. அந்தக் காட்சிகள் இரண்டும் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற காட்சிகளாகும். மேலும் இப்படத்தின் அடுத்தடுத்த நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் பாடல்கள் வீடியோவாக யூடியூப் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.